நாம் ஒவ்வொருவருமே கேள்விகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான். அவற்றில் மனித நாகரீகத்தின் துவக்கம் முதல் இன்று வரை கேட்கப்படும் கடவுள் பற்றிய கேள்விகள் தவிர்க்க முடியாதவை. எல்லா வினாடிகளிலும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாரேனும் கடவுளைக் குறித்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் தர்க்கித்துக் கொண்டும் தான் இருக்கின்றனர். இப்புத்தகம் பதில்களை தேடும் கேள்விகளின் புத்தகம். உங்களில் சிலருக்கோ அல்லது உங்களை சுற்றி இருக்கும் சிலருக்கு கேள்விகள் இவை. இவை பதில்களைத் தரலாம். அல்லது மேலும் கேள்விகளை உண்டாக்கலாம்.
பென்னி விஜய்
