இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு சகித்த ஒவ்வொரு காயங்களின் குறிக்கோளும், அவர் பிசாசானவனை எவ்வாறு கல்வாரியில் முற்றிலுமாக ஜெயங்கொண்டார் என்பவைகளை விளக்குவதே “இயேசுவின் காயங்கள் அவற்றின் வல்லமையும் நோக்கங்களும்” என்ற புத்தகத்தின் சாராம்சம் . அவர் நமக்காக சகித்த இந்த அகோரப் பாடுகளைக் குறித்து நீங்கள் வாசிக்கும்போது, கீழ்க்கண்ட உண்மைகளை அறிந்துகொள்வீர்கள்.
* கிறிஸ்துவின் ஒவ்வொரு காயங்களிலும் காணப்படும் ஆவிக்குரிய குறிக்கோள்.
* இந்தக் காயங்களை ஏற்படுத்தியதற்கான சாத்தானின் நோக்கம்.
* இதினிமித்தம் நாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள்.
சாத்தானின் திட்டம் அனைத்தையும் இயேசு சிலுவையில் முறியடித்தார். அவருடைய பாடுகள், அவருடைய காயங்கள், அனுபவித்த வேதனைகள் யாவும் இன்று நமக்கு கிடைத்த தேவனுடைய வல்லமையாக மாறிவிட்டது. அவர் நமக்குள் வைத்த இந்த வல்லமையினால் நாம் சகலத்தையும் எதிர்கொள்ளவும், மேற்கொள்ளவும் வல்லமை பெற்றிருக்கிறோம்.