சிலுவையிலிருந்து பேசப்பட்ட வார்த்தைகள் ” சிலுவையில் கொடிய
பாடுகளை அனுபவித்த ஒருவரின் மகா மேன்மையை வெளிப்படுத்துகிறது.அப்பாடுகளையும், அப்பாடுகளின் நோக்கத்தையும், அதின் அர்த்தத்தையும் நமக்கு அறிவிக்கிறது.
எல்லாவற்றிற்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை நமக்கு அறிவித்துக் கொண்டேயிருக்கிறது” என்பதை டாக்டர். ஆர்தர் W. பிங்க் விவரிக்கிறார்.
“சிலுவையில் அருளிய இரட்சகரின் ஏழுவார்த்தைகள்” என்ற இப்புத்தகத்தில், அதன் ஆசிரியர் டாக்டர் பிங்க், அந்த ஏழுவார்த்தைகளின் மூலம் வெளிப்படும் பாடங்களையும், அவைகளை மகிமையான் மீட்பின் செய்தியால் வாசகர்களை எப்படி நிரப்புகிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார்.
* மன்னித்தல் * இரட்சிப்பு * பாசம் * வியாகுலம்
* பாடுகள் * வெற்றி * மனநிறைவு
என்ற தலைப்பிலான அதிகாரங்கள் உள்ளுணர்வூட்டும் பாடைங்களாக அமைகின்றன.
ஒவ்வொரு செய்தியும் ஏழுவகையான காரியங்களை உணர்த்துகினறனவாய் இருக்கின்றன. ஆகவே டாக்டர் பிங்க் அவைகளை ஏழு துணைத் தலைப்பின் கீழ் அமைத்து மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். அவைகள் தனிப்பட்ட ஆழ்ந்த படிப்பிற்க்கும், பிரசங்க ஆயத்தங்களுக்கும் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.