சிலுவையில் இயேசு மொழிந்த ஏழு வார்த்தைகளைப்பற்றிய எத்தனையோ புத்தகங்கள் உண்டு! என்றாலும், அந்த வார்த்தையில் அடங்கியுள்ள கருத்துக்களை, ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான கோணத்தில் கண்ணோக்கி, விளக்கம் தருகின்றன! அதுபோல, இந்த புத்தகத்தினை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும், அவருடைய வார்த்தைகளை உள்ளவாறு ஏற்றுக்கொண்டு, தங்களையே கிறிஸ்துவின் சிலுவைக்குமுன் நிறுத்தி, கிறிஸ்துவின் சமுகத்தில் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படியான நோக்குடன் எழுதப்பட்டுள்ளது. ஓர் குற்றவாளியின் சின்னமாகிய, எல்லாராலும் ஏளனமாகக் கருதப்பட்ட சிலுவையை, அருள்நாதர் இயேசு ஏற்றுக்கொண்டாரென்றால், அந்த அவமான சின்னத்தை தாமே சுமந்தாரென்றால், அதற்கான காரணத்தை, அதில் மறைந்திருக்கும் மிகவும் ஆழமான இறைவனுடைய நோக்கத்தை, உண்மையை அறிந்துகொள்வது, நமக்கு நிச்சயம் பெருத்த ஆசீர்வாதமாக முடியும்.
சிலுவை நமக்கு ஒரு நம்பிக்கையின் சின்னமாகவும், இறை அன்பினை வெளிப்படுத்தும் ஒரு புனித சின்னமாகவும் தோன்றும்! இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த ஆசீர்வாதத்தை தேவன் அருளுவாராக!