கர்த்தர் சாலமோன் ராஜாவுக்கு ஒரு சொப்பனத்தில் தோன்றி அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சாலமோன் ஞானத்தைக் கேட்டான் இதைக்கேட்டு கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார். எனவே சாலமோன் கேட்ட ஞானத்தோடு கூட அவன் கேளாத ஐஸ்வர்யத்தையும், கனத்தையும் அவனுக்கு அளவில்லாமல் கொடுத்தார். மறுநாள் சாலமோன் விழித்தெழுந்த போது அது ஒரு சொப்பனம் என்று புரிந்துக் கொண்டான். சாலமோன் உறங்கிக் கொண்டிருக்கும் போது கர்த்தருக்கு மாறுத்தாரம் சொன்னது யார்?
ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். ஆபிரகாம் ஏறெடுத்துப் பார்த்தால் தன் பின்னால் இருந்த கடாவை எப்படி பார்த்திருக்கக் கூடும்?
பிசாசு இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தில் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிடத்திலே அவருக்கு காண்பித்தான். இப்படி சாத்தான் இயேசுவுக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்து அவரை சோதிக்க முயன்றான் என்றால் சாத்தான் நமக்கும் தரிசனத்தை காண்பிக்க முடியுமல்லவா?
* ஒரு தரிசனமோ, சொப்பனமோ கர்த்தரிடமிருந்து தான் வருகிறது என்று நீங்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?
* ஒரு தரிசனத்திற்கும் ஒரு சொப்பனத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
* கர்த்தரிடமிருந்து தரிசனங்களையும், சொப்பனங்களையும் பெற்றுக்கொள்ள திறவுகோல்கள் ஏதாகிலும் உண்டா?
* உங்கள் தரிசனங்களுக்கும் சொப்பனங்களுக்கும் அதன் விளக்கத்தை எப்படி அறிய முடியும்?
*தரிசனங்களையும் சொப்பனங்களையும் குறித்த உங்கள் தாகத்துக்கும், எதிர்பார்ப்புக்கும், வினாக்களுக்கும் இந்த புத்தகம் விடையளிக்கும்.