ஓவ்வொரு போதகரும் தங்கள் ஊழியத்தின் ஏதேனும் ஒரு சமயத்தில் குறைவையும், தனிமையையும் உணர்ந்திருக்கிறார்கள். ஜனங்களுக்கும், தேவனுக்கும் ஊழியம் செய்வது என்பது ஒரு எளிதான வேலை அல்ல. “போதகர்களின் போதகரான” வாரன் வியர்ஸ்பி, ஊழிய வாழ்க்கை கொண்டு வரும் போராட்டங்களையும் வெற்றிகளையும் அறிந்துள்ளார்.
“தேவனுடைய ஊழியராய் இருத்தல்” என்ற இப்புத்தகம் உங்களை முப்பது பகுதிக்கு ” எளிதான கருத்துப் பறிமாற்றது” க்கு அழைக்கிறது. வாரன் W.வியர்ஸ்பி அவர்கள் தனது கிறிஸ்துவ யாத்திரையை ஆரம்பிக்கும் போது பிறருக்கு ஊழியம் செய்வதால் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும் எனறு விரும்பினதை. புத்திசாலித்தனத்தோடும், உணர்வுப் பூர்வமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார். அவருடைய அனுபவ வருடங்களும் ஞான ஆலோசனைகளும் உங்களது ஆத்துமாவுக்கு ஆறுதலையும், உங்கள் பணிக்குத் தேவையான ஆற்றலையும் தருவதாக.