தேவசகாயம் (Devasayagam)

50.00

உறவினர்களாலும், நண்பர்களாலும் *நீலம்புலே* என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இந்து ஆசாரம் மிகுந்த நாயர் குடும்பமொன்றில் 1712-ஆம் ஆண்டு நாட்டலம் என்ற கிராமத்தில் பிறந்தார். நீலகண்டம் பிள்ளை கிறிஸ்தவரான தேவ சகாயமாக மாறுவதற்கு காரணம் டிலனாய்ட் என்ற பெல்ஜிய நாடு போர்வீரன். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் திருமுழுக்கு பெற்ற தேவ சகாயம் அனைதையும் இழந்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இறுதியில் மன்னரின் கோபத்திற்கு ஆளானார். மன்னர் மட்டுமல்ல மற்றவர்களும் அவரை தீர்த்து கட்ட முயற்சிகள் பல எடுத்தனர். அனால் தேவசகாயம் பிள்ளை நெஞ்சுரத்தோடு அவைகளை தங்கி கொடுமைகளை சந்திக்கத் தயாரானார். தேவ சகாயம் தனது நாற்பதாவது வயதில் இறந்தார். தேவ சகாயம் இறந்த பின் அவருடைய சரீரத்தைக்கூட கிறிஸ்தவர்களிடம் கொடுக்க மனதில்லாமல் கொடூரமாக காட்டில் தூக்கி எறிந்தனர். அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஆகும்.

Share

நீலகண்டம் பிள்ளை

 

You may also like…