இயேசுகிறிஸ்து சிலுவையிலிருந்து சொன்ன ஏழு திருமொழிகளை ஆண்டுக்கு ஒரு முறை தியானிப்பது நமது வழக்கம், ஒரே வழிபாட்டில் ஏழு திருமொழிகளையும் ஒருவர் பின் ஒருவராகப் பேசும்போது. காலத்தின் அருமை கருதி மிகமிகச் சுருக்கமாக நாம் அவற்றைத் தியானிப்பதால்.
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அடங்கியுள்ள ஆழமான சத்தியங்களை விபரமாய் விளங்கிக்கொள்ள இயலாமல் போய்விடுகிறது, சற்றே நிதானமாக நாம் சிலுவைத் திருமொழிகளைப் பகுத்தாய முயலும்போது, அவற்றின் தாக்கம் நம்மை உணர்த்துதலுக்கும். உயிரூட்டுதலுக்கும் தாழ்மையான அர்ப்பணத்துக்கும் நேராய் உந்தித் தள்ளுகின்றன,
‘இயேசுவின் சிலுவைத் திருமொழிகள் ஏழு’ என்னும் இந்த நூல். ஏழு வார்த்தைச் செய்தியாளர்களுக்குப் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை, எனினும் இந்நூல் நமது தனித் தியானத்துக்கும், நாம் இன்னும் அதிகமாய் நமதாண்டவர் இயேசுவை அறிவதற்கும். அவரை நெருங்கிச் சேர்வதர்க்கும் பயன்படவேண்டும் என்பதே எமது நோக்கமாகும், சிலுவைத் திருமொழிகளின் செய்திகளை நமது அனுபவமாக்குவொம். பின்னர் அறிவிப்போம், இந்த எளிய முயற்சியின் வழியாய் கடவுளின் பரிசுத்த நாமமே மகிமைப்படுவதாக.