தேவனின் கடத்தல்காரன் (Devanin Kadaththalkaaran)

175.00

உண்மை சரிதை
பிரதர் ஆன்ரூ ஒரு சிறுவனாக இருந்தபோது எதிரி படைகளுக்குள் ஊடுருவிய இரகசிய படைவீரனாக தன்னை கற்பனை செய்து கொள்ளவதுண்டு ஆனால் அவர் பெரியவனான போதோ, தேவனுடைய இ ரகசிய படைவீரனாக மாறிவிட்டார்.அவருடைய ஊழியம் ஆபத்துக்கள் நிறைந்த தாயும் அவருடைய தேவைகள் விசுவாசத்தால் சந்திக்க படுவதாயும் அவர் அனுதின வாழ்க்கை அற்புதங்கள் நடத்தப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. இரும்பு திரைக்கு அப்பால் ஊழியம் செய்யவே முடியாது என்று நம்பப்பட்ட காலத்தில், தேவனால் கூடாத காரியம் எதுவும் இல்லை என்று நம்பி, ஆன்ரூ இந்த ஊழியத்தை ஆரம்பித்தார்.அவர் ஒவ்வொரு முறையும் கடக்க முடியாத அந்த எல்லைகளின் சோதனைச் சாவடியை அணுகும்போதும் கர்த்தரை நோக்கி, ” ஆண்டவரே என்னிடம் உம்முடைய பிள்ளைகளுக்காக கொடுக்க நான் எடுத்துக் கொண்டு போகும் வேதாகமங்கள் நிறைய இருக்கிறது. இந்த உலகத்தில் நீங்கள் ஊழியம் செய்த போது, குருடான கண்களை திறந்தீர்.ஆனால் இப்போது காண்கிற அவர்களுடைய கண்களை குருடாக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். அந்த அதிகாரிகள் எதையெல்லாம் காணக்கூடாது என்று விரும்புகிறீரோ,அவை அனைத்தையும் அவர்களுடைய கண்களுக்கு மறைவாக்கு ம் என்று ஜெபிப்பார்.அந்த ஜெபத்திற்கு ஏற்ப கடைசி வரையிலும் அவர் கொண்டு போன சரக்குகள் யாருடைய கண்களிலும் படவே இல்லை! ஆன்ரூவின் இந்த அதிசய சரிதை கடந்த 40 ஆண்டுகளாக பலருடைய விசுவாசத்தை உற்சாகமூட்டி எழுப்பிவிட்டு இருக்கிறது. தங்களுடைய அழைப்பை உணர்ந்து அதற்கு உண்மையாக இருக்க விரும்புவோருக்கு,தேவனுடைய அன்றாட ஆலோசனையும், குறைவற்ற நடத்துதலும் எப்போதும் இருக்கும் என்பதற்கு இந்த இளம் டச்சு கம்பெனி ஊழியரின் சாதனைகள் நல்ல சாட்சியாகும்.

Out of stock

SKU: WOCT171 Category: Tag:
Share

பொருளடக்கம்
1. புகையும் பிரட் துண்டுகளும்……………. . ……………. ……..1
2. மஞ்சள் நிற நார் தொப்பி. .. …………… .. . ……….. . … .19
3. கிளிஞ்சலுக்குள் இருந்த கூழாங்கல். .. …… ………… . .39
4. புயல் சூழ்ந்த இரவு… . ………… .. …………. .. …….. .. . .47
5. ஒப்புக்கொடுத்தல் என்ற படி… . …. .. .. .. .. .. .. .. .. .. .. .. .63
6. ராஜாவின் வழி .. …. ………………. ……….. ………….. ….. .93
7. இரும்புத் திரைக்குப் பின்னால் … … .. .. .. .. .. .. .. . .119
8. பாடுகளின் பாத்திரம். …. … ………….. … . .. .. . …… .. . ..135
9. அஸ்திபாரங்கள் போடப்பட்டன .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 151
10. இருளில் தோன்றிய மண்ணென்னை விளக்குகள்.. .. .. .. ..165
11. மூன்றாவது ஜெபம்.. .. .. .. . .. .. .. .. .. . .. . . …… . .. 183
12. உன்னதத் திருச்சபை.. .. .. . ……….. … .. .. …….. ….. ……..209
13. உள்வட்டத்தின் விளிம்புக்கு .. .. .. .. .. .. .. .. .. .. .. . …… . 223
14. இராட்சதர்களை வீழ்த்துபவராகிய ஆபிரகாம்.. .. .. .. .. .. .237
15. தோட்டத்திலிருந்த செடி வளர்ப்பு வாளகம்.. .. .. .. .. .. .. .251
16. ஊழியம் விரிவடைய ஆரம்பித்தது. .. .. .. .. .. .. .. .. .. .. ..267
17. ரஷ்யா முதல் பார்வையில் .. .. .. .. .. .. .. .. .. .. .. . .. .. .285
18. அன்புடன் ரஷ்யாவுக்கு அன்புடன்.. .. .. . . .. . . .. ………. .293
19. ரஷ்யா போதகர்களுக்கு வேதாகமங்கள் .. .. . .. . .. . .. .. .305
20. விழித்தெழும்பும் வலுசர்ப்பம்.. .. ….. ….. … …… .. .. ..319
21. நம்பிக்கையின் அப்போஸ்தலர்கள் பன்னிரண்டுபேர்.. .. ..337
முடிவுரை;- புதிய ஆயிரம் ஆண்டுக்கு உள்ளே .. .. .. .. ..364

Weight 354 kg
Dimensions 14 × 1.6 × 21.3 in