சீனச் சிறையில் பாடுகளும் அற்புதங்களும்
யூன் (Yun)
₹60.00
இது ‘பரலோக மனிதன்’ என்று சொல்லப்படுகின்ற சகோதரர் யூன் அவர்களின் அற்புதமான உண்மை சம்பவங்களின் தொகுப்பு. சீனாவில் முப்பது முறைகளுக்கும் மேலாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மிகக்கொடிய சித்ரவதைகளை சகித்துக்கொண்ட சகோதரர் யூன் மிகதழ்மையான ஒரு மனிதர். தன்னுடைய தகப்பனார் கொடிய வியாதியிலிருந்து ஜெபத்தின் மூலமாக அற்புத சுகத்தை பெற்றுகொண்’டதைத் தொடர்ந்து யூன் தன்னுடைய வாழ்கையை பதினாறு வயதிலேயே தேவனுக்கென்று ஒப்புகொடுத்தார். இன்று அனேக ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த அருமையான தேவனுடைய ஊழியக்காரர் விவரிக்க முடியாத சித்ரவதைகளைக்கண்டு தளராமலும் இயேசு கிறிஸ்துவுக்காக நின்று தைரியமாக தொடர்ந்து ஊழியம் செய்கிறார். வீட்டு சபை இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்து செயல்பட்டு லட்சகணக்கான விசுவாசிகளை தலைமையேற்று நடத்துகிறார்.